• முகவரி : எண்: 27, ஏ.பி. ரோட், அரசு ஐடிஐ, திண்டுக்கல், தமிழ்நாடு 624 003
  • தொலைபேசி எண் : +91 94437 24701 | +91 97860 34291
  • +91 97860 34291

  • mrrnaturals@gmail.com

தேன் மருத்துவகுணங்கள்

தேன் இயற்கை அளித்த இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும் வைட்டமின்களும் தேனில் உண்டு கொம்புத்தேன் மலைத்தேன் மரப்பொந்துத்தேன் மனைத்தேன் புற்றுத்தேன் புதியதேன் பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும் ஊளைச் சதை குறையும் உடல் உறுதியாகும்

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி குமட்டல் ஜலதோஷம் தலை வலி குணமாகும்

தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்

தேன் முட்டை பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்

வயிற்று வலி ஏற்படுபவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் தேனை தடவினால் வலி நீங்கும்

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும்

அதிகாலையில் படுக்கச் செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது

அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது